Friday, March 18, 2011

நீராவிக் குளியல்

மழைக் காலங்களிலும், குளிர் நாடுகளிலும் நீராவிக் குளியல் பயன் தரும். இந்த இடங்களில் வியர்வை மூலமாக கழிவுகள் வெளியேறுவது மிகவும் குறைவு. இந்த குறையை நீராவிக் குளியல் போக்குகிறது. இதை வீடுகளிலேயே எடுக்கலாம். துளசியிலை, வேப்பிலை, நொச்சி இலை போன்றவற்றை பயன்படுத்தலாம். பிரஷர் குக்கர் மற்றும் கேஸ் டியூப் போதுமானது. குக்கரில் தண்ணீர் வைத்து குக்கரை சூடு ப டுத்தவும். கேஸ் டியூப்பை குக்கரில் ஆவி வரும் இடத்தில் பொருத்தவும். நீராவிக் குளியல் எடுப்பவரை ஒரு ஸ்டூல் (அ) சேரில் உட்கார வைத்து 3 (அ) 4 போர்வைகள் எடுத்து மூடவும். குக்கரில் இருந்து வரும் நீராவியை போர்வையின் வழியாக உள்ளே செலுத்தவும்.(சிகிச்சை பெறுபவர் உடலின் மேல் ஆவி படக் கூடாது). பிரஷர் குக்கர் கீழே விழாதவாறு ஒருவர் கவனித்துக் கொள்ள வேண்டும். நன்றாக வியர்க்க வேண்டும். சிகிச்சை பெறுபவர் இயன்ற வரை உள்ளே இருக்க வேண்டும். சளி, ஆஸ்த்துமா, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்ல பலன் தரும்.